பணம் கொடுத்து பாக்கியராஜ் அணி ஓட்டு கேட்பதா..? நடிகர் கருணாஸ் கண்டன அறிக்கை..!

Advertisement

நடிகர் சங்கத் தேர்தலில் பாக்கியராஜ் அணியினர் பணம் கொடுத்து ஓட்டு கேட்பதாக நடிகர் கருணாஸ் புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு;


நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் 61 உறுப்பினர்கள் திடீரென நீக்கப்பட்டு, பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் தேர்தலை மாவட்ட பதிவாளர் தேர்தலை நிறுத்த உத்தரவு பிறப்பித்தார். அது ஒரு பக்கம் இருக்க,
இன்று (20.6.2019 ) மதியம் உயர்நீதிமன்றம் 61 உறுப்பினர்களை நீக்கியது சட்டப்படி சரியே என்று தீர்ப்பு வழங்கி உள்ளது. இது ஒரு புறம் இருக்க,
சங்கரதாஸ் சுவாமி அணியினர், இந்த தேர்தலில் எதையாவது செய்து எப்படியாவது வெல்லவேண்டும், என்று பல்வேறு குளறுபடி வேலைகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, சேலத்தில் உள்ள அனைத்து நாடக கலைஞர்களின் குடும்பங்களுக்கு வீடுவீடாக சென்று பணம் விநியோகம் செய்கின்றனர். இதை ஐசரி கணேஷ் ஏற்பாட்டின் பேரில் இது நடக்கின்றது.
ஆளுங்கட்சி எம். எல்.ஏ.சக்திவேல், சேலம் முன்னாள் மேயர் சவுண்டப்பன் ஆகியோரின் துணையோடு இந்த பணபரிமாற்றம் நடக்கிறது.
தமிழ்நாடு பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கிறது.. குறிப்பாக தண்ணீர் பிரச்சினையில் அல்லோலப்படுகிறது. அதையெல்லாம் மறந்து விட்டு மக்கள் பிரதிநிதியாக இருக்கக் கூடிய எம்.எல்.ஏ. சக்திவேல் – பகுதி கவுன்சிலர் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் அதும் ஐசரி கணேஷிற்கு வாக்கு சேகரிக்க பணம் கொடுக்கும் துரோகச்செயலில் ஈடுபடுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தற்சமயம் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் பாண்டவர் அணியான நாங்கள் உச்சி மலைமீது முக்கால் பகுதி ஏறிவிட்டோம்.. இன்னும் கொஞ்சம் தூரம் உள்ளது அது வெற்றியின் அடையாளமே.
ஆனால் சங்கரதாஸ் சுவாமி அணி குறுக்கு வழியில், கொள்ளைபுறம் வழியாக நுழைய நினைக்கின்றனர். அது ஒருபோதும் நிலைக்காது. மூன்று ஆண்டுகள் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி களத்தில் நிற்கும் பாண்டவர் அணியினரை வெல்ல முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.மேற்கண்டவாறு கருணாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

- தமிழ் 

விஷால் ஒரு சுண்டக்காய்; நடிகர் எஸ்.வி.சேகர் கடுப்பு

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>