மாஃபியா டீமின் மாஸ் அப்டேட் இதோ!

by Mari S, Aug 26, 2019, 19:25 PM IST

அருண்விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஃபியா படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக முடிந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

அருண்விஜய் 2.0 வெர்ஷன் போல அதிரடி காட்டி வருகிறார். என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்ததில் இருந்து அருண்விஜய்க்கு மீண்டும் சினிமாவில் ஒரு கம் பேக் கிடைத்துள்ளது.

மணிரத்னமின் செக்கச்சிவந்த வானம், இந்த ஆண்டு வெளியான தடம் என அடுத்தடுத்து கலக்கி வரும் அருண்விஜய், இந்த வாரம் வெளியாகவுள்ள 300 கோடி பிரம்மாண்ட படமான சாஹோவில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள மாஃபியா திரைப்படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக முடிந்துள்ளதாகவும், விரைவில் திரைக்கு வர தயாராகி உள்ளதாகவும் படக்குழு ஒரு மாஸ் அப்டேட் கொடுத்துள்ளது.

லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படம் பல பாகங்களாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது மாஃபியா சாப்டர் -1 படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய கார்த்திக் நரேனின் நரகாசூரன் படம் ரிலீஸ் ஆவதில் சில சிக்கல்கள் ஏற்பட்ட நிலையில், அடுத்த படமான மாஃபியாவை இயக்கி முடித்துள்ளார்.

 


Leave a reply