மீண்டும் ஒரு நடிகையர் திலகமாக உருவாகுமா மிஸ் இந்தியா?

by Mari S, Aug 27, 2019, 10:22 AM IST

கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்து வரும் ’கீர்த்தி 20’ படத்திற்கு ‘மிஸ் இந்தியா’ என தலைப்பிட்டுள்ளனர்.

சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். ரெமோ, பைரவா, சாமி 2, சண்டக்கோழி 2, பாம்புச்சட்டை, தொடரி, தானா சேர்ந்த கூட்டம், நடிகையர் திலகம், சர்கார் என பல படங்களில் தொடர்ந்து நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக வலம் வந்தார்.

தளபதி விஜய்யுடன் பைரவா மற்றும் சர்காரில் நாயகியாக நடித்து அசத்தி இருந்த கீர்த்தி சுரேஷ், தெலுங்கு மற்றும் தமிழில் உருவான நடிகையர் திலகம் படத்திற்காக சமீபத்தில் தேசிய விருதினை வென்றுள்ளார்.

இந்நிலையில், கீர்த்தி சுரேஷின் 20வது படம் உருவாகி வருகிறது. அந்த படத்திற்கு மிஸ் இந்தியா என பெயர் வைத்துள்ளனர். இந்த படமும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வருகிறது. மேலும், இது கீர்த்தி சுரேஷுக்கு மீண்டும் ஒரு நடிகையர் திலகம் படம் போல அமையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த படத்தின் டைட்டிலை வெளியிடுவதற்கே ஒரு டீசரை படக்குழு உருவாக்கியுள்ளனர். நரேந்திரநாத் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

அக்டோபரில் ரிலீசாகும் கைதி!


Leave a reply