அக்டோபரில் ரிலீசாகும் கைதி!

Kaithi Movie will be release on October

by Mari S, Aug 26, 2019, 10:50 AM IST

தளபதி 64 படத்தை இயக்கவுள்ள லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கைதி படம் வரும் அக்டோபர் மாதம் ரிலீசாகிறது.

மாநகரம் என்ற லோ பட்ஜெட் படம் மூலம் மாபெரும் வெற்றியையும் விமர்சனத்தையும் பெற்றவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

அடுத்து, கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் கார்த்திக்கு நாயகி யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கிரைம் த்ரில்லராக உருவாகியுள்ள கைதி படம் அக்டோபரில் ரிலீஸ் ஆகிறது என்ற அறிவிப்பை நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும், விஜய்யை வைத்து அவர் இயக்கவுள்ள தளபதி 64 திரைப்படமும் அக்டோபரில் தான் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

கைதி படத்திற்கு பிறகு பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சுல்தான் படத்தில் நடித்து வருகிறார் நடிகர் கார்த்தி. அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீத கோவிந்தம், டியர் காம்ரேட் படங்களில் நடித்த ராஷ்மிகா மந்தனா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஜாக்கிசானை பின்னுக்குத் தள்ளிய அக்ஷய் குமார்!

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை