இது ரங்காவா? இல்ல ரோஜாவா?

by Mari S, Aug 29, 2019, 11:22 AM IST
Share Tweet Whatsapp

நடிகர் சிபிராஜின் ரங்கா பட டீசர் வெளியாகி உள்ளது. இந்த டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதள பக்கங்களின் வாயிலாக வெளியிட்டுள்ளார்.

டி எல் வினோத் இயக்கத்தில் சிபிராஜ், நிகிலா விமல் நடிப்பில் உருவாகியுள்ள ரங்கா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ரங்கா என்ற டைட்டிலில் ஏற்கனவே ரஜினியின் பழைய படம் வெளியாகி பயங்கர ஹிட் கொடுத்தது.

ஆனால், இந்த ரங்கா படம், ரஜினியின் ரங்கா படத்தின் ரீமேக் அல்ல, பெயர் மட்டுமே ரஜினியின் ரங்கா படத்தை நினைவு படுத்துகிறது. படத்தின் டீசரை பார்த்தால், காஷ்மீருக்கு ஹனிமூன் செல்லப்போகும் சிபிராஜுக்கும், நிகிலாவுக்கும் தீவிரவாதிகளல் ஏற்படும் அபாயமும் அதில் இருந்து சிபிராஜ் எப்படி தனது மனைவியை காப்பாற்றுகிறாரா இல்லையா என்பதே படத்தின் கதை போல தெரிகிறது.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்திற்கு பிறகு, இதுபோன்ற ஒரு கதையம்சம் கொண்ட படம் தமிழில் வெளியாவதால், அதே படத்தின் சாயல் இல்லாமல், கதை வேறு கோணத்தில் சென்றால் மட்டுமே வெற்றி பெற முடியும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

சிபிராஜுக்கு இன்னமும் ஒரு பெரிய அளவில் நல்ல ஹிட் அமையவில்லை. அந்த ஹிட்டை இந்த ரங்கா படமாவது கொடுக்குமா என்று காத்திருப்போம்.

பிகில் ரிலீஸை அம்பலப்படுத்திய கைதி பட அப்டேட்!


Leave a reply