தீபாவளிக்கு போட்டி கன்ஃபார்ம் பிகில் மாஸ் அப்டேட்!

by Mari S, Aug 29, 2019, 11:05 AM IST

ஆரம்பத்தில் சொன்னது போலவே தீபாவளி பண்டிகையன்று விஜய்யின் பிகில் திரைக்கு வருகிறது என்ற அறிவிப்பை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் தீபாவளி வெளியீடாக வெளியாகிறது. சில நாட்களுக்கு முன்பு, தீபாவளிக்கு முன்பாகவே பிகில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், அர்ச்சனா கல்பாத்தி, தீபாவளிக்குத் தான் பிகில் ரிலீஸ் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், செப்டம்பர் மாதம் முழுவதும் பிகில் அப்டேட்களால் நிரம்பி வழியும் என்றும் தெரிவித்துள்ளார்.

கார்த்தியின் கைதி மற்றும் விஜய் சேதுபதியின் சங்கத் தமிழன் படங்களும் தீபாவளியன்று வெளியாவதால், இந்த தீபாவளி ரேஸ் கொஞ்சம் டஃப் காம்பெடிஷனாகவே இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

போட்டிக்கு யார் வந்தாலும், விஜய்யின் பிகில் திரைப்படம் மாபெரும் வெற்றி பெறும் என்ற முழு நம்பிக்கையுடன் படக்குழு முழு புரமோஷன் பணிகளில் களமிறங்கி உள்ளனர்.

பெண்கள் கால்பந்த அணியுடன் விஜய் நின்ற போஸ்டருக்கு பதிலாக, தற்போது, ஆனந்த்ராஜ், யோகிபாபு, என அடியாட்கள் மற்றும் நண்பர்கள் சகிதமாக விஜய் போஸ் கொடுத்துள்ள போஸ்டரும் வைரலாகி வருகிறது.

 


Leave a reply