பிகில் ரிலீஸை அம்பலப்படுத்திய கைதி பட அப்டேட்!

by Mari S, Aug 27, 2019, 21:10 PM IST

கார்த்தியின் கைதி திரைப்படம் தீபாவளிக்கு ரிலீசாகிறது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள கைதி திரைப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

முன்னதாக அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தீபாவளி ஞாயிற்றுக் கிழமை வருவதால், அந்த வாரம் வெள்ளி அல்லது வியாழக்கிழமையே பிகில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இதனால், தீபாவளி பண்டிகையன்று விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் மற்றும் கார்த்தியின் கைதி படங்கள் அன்றைய தினம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளன.

திங்கட்கிழமையும் விடுமுறை என்பதால், வெளியாகும் அனைத்து படங்களும் கல்லா கட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 திரைப்படம் ரெடியாவதால், விஜய்யின் பிகிலுடன் அவரது படமான கைதி படத்தை மோத விடமாட்டார்கள், இதனால், மேலும், பிகில் படம் தீபாவளிக்கு முன்னரே வெளியாவது தெரிந்து தான் இந்த அறிவிப்பை கைதி படக்குழு வெளியிட்டுள்ளது என்ற தகவலும் கோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.


Leave a reply