பிக்பாஸ் கவினின் தாயாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

by Mari S, Aug 29, 2019, 20:49 PM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி நிகழ்ச்சியில் வேட்டையனாக நடித்து புகழ் பெற்ற கவின், தற்போது பிக்பாஸ் 3வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில், சீட்டு கம்பெனி நடத்தி பல லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்த வழக்கில் கவினின் தயார் உள்ளிட்ட அவரது குடும்பத்தை சேர்ந்த 3 பெண்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள அதிர்ச்சிகரமான விபரங்கள் வெளியே கசிந்து வைரலாகி வருகின்றன.

பிக்பாஸ் இல்லத்தில் பல பெண்களை காதலித்து வரும் கவின், தற்போது லாஸ்லியாவிடம் வழிந்து வருகிறார். மேலும், கவினின் முன்னாள் காதலி பிரியா பவானி சங்கர் என்றும் இருவருக்கும் பிரேக் அப் ஆனது குறித்தும் தகவல்கள் கசிந்துள்ளன.

இப்படி பிக்பாஸ் இல்லத்தில் காதல் லீலைகளை புரிந்து வரும் கவின் குடும்ப பெண்கள் மோசடி வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் விஷயம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Leave a reply