சிக்ஸர் படத்திற்கு எதிராக நடிகர் கவுண்டமணி நோட்டீஸ்

by Mari S, Aug 29, 2019, 19:23 PM IST

வைபவ் நாயகனாக நடித்திருக்கும் சிக்ஸர் படத்தின் பிரஸ் ஷோ இன்று திரையிடப்பட்டது. அந்த காட்சிக்கு பிறகு, நடிகர் கவுண்டமணி சார்பில் சிக்ஸர் படக்குழுவுக்கு வக்கீல் நோட்டீஸ் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் சாச்சி இயக்கத்தில் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள சிக்ஸர் படம் நாளை திரைக்கு வருகிறது. அந்த படத்தின் பிரத்யேக காட்சி இன்று மாலை போடப்பட்டது. அந்த காட்சியை பார்த்த கவுண்டமணியின் லீகல் டீம், படத்திற்கு எதிராகவும் படக்குழுவுக்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

சிக்ஸர் படத்தில் நடிகர் கவுண்டமணியை தவறாக சித்தரித்து சில வசனங்களும் காட்சிகளும் வைக்கப்பட்டுள்ளதாக கவுண்டமணி தரப்பில் இருந்து புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சின்னதம்பி படத்தில் கவுண்டமணி மாலைக் கண் நோயாளியாக நடித்திருப்பார். அவரது காமெடி டிராக்கை மையமாக வைத்தே சிக்ஸர் படத்தில் நாயகன் வைபவுக்கு மாலைக் கண் நோய் என்றும், அதனால், அவருக்கு ஏற்படும் விளைவுகள் குறித்த படமாக சிக்ஸர் உருவாகியுள்ளது. இந்நிலையில், படத்திற்கு கவுண்டமணி தரப்பில் இருந்து இப்படி ஒரு எதிர்ப்பு கிளம்பி இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.


Leave a reply