சிவகார்த்திகேயனின் புது ஜோடி அனு இம்மானுவேல் யார் தெரியுமா?

by Mari S, Aug 29, 2019, 16:35 PM IST
Share Tweet Whatsapp

நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் நடிகை அனு இம்மானுவேல்.

அமெரிக்காவில் பிறந்த இவர், மலையாள படமான சுவப்னா சஞ்சரி மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

பின்னர், நிவின் பாலியின் ஆக்‌ஷன் ஹீரோ பிஜு படத்தின் மூலம் நாயகியாக மலையாள சினிமா உலகில் கால் பதித்தார் அனு இம்மானுவேல்.

தொடர்ந்து, மலையாளம் மற்றும் டோலிவுட்டில் பல முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள அனு இம்மானுவேல், தமிழில் வெளியான துப்பறிவாளன் படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு எண்ட்ரி கொடுத்தார்.

ஆனால், அந்த படத்தில் அவருக்கு பெரிதான ரோல் ஏதும் இல்லாததால், பலருக்கும் அவர் குறித்து தெரிய வாய்ப்பில்லை. தற்போது சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நாயகியாக நடித்துள்ளதால், யாருடா இந்த புது ஜோடி என்று கூகுளில் பலரும் அனு இம்மானுவேல் குறித்து தேட ஆரம்பித்துள்ளனராம்.

நேற்று வெளியான மைலாஞ்சி பாடலில் செம்ம க்யூட் டாலாக அனு இம்மானுவேல் பப்ளியாக காட்சியளித்து பல இளைஞர்களின் வாட்ஸப் ஸ்டேட்டஸ் மற்றும் டிபியாக மாறியுள்ளார்.

விரைவில் வெளியாகும் நம்ம வீட்டு பிள்ளை படத்தின் ரிலீசுக்கு பின்னர், அனு இம்மானுவேலுக்கு கோலிவுட்டிலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெஷல் ட்ரீட்!


Leave a reply