சம்பளம் தராமல் ஏமாற்றும் தயாரிப்பாளர்கள் - தனுஷ் ஓபன் டாக்!

by Mari S, Aug 29, 2019, 16:26 PM IST

சினிமா படங்களை தயாரிக்கும் பல தயாரிப்பாளர்கள் நடிகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு உரிய சம்பளத்தை தருவதில்லை என அசுரன் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் ஓபன் டாக் கொடுத்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள அசுரன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் தனுஷ், இப்போதெல்லாம் பல தயாரிப்பாளர்கள் சம்பளமே தராமல் ஏமாற்றி வருகின்றனர் என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

ஆனால், அசுரன் படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ். தாணு, தனக்கு படம் ஆரம்பிக்கும் முன்னதாகவே முழு சம்பளத்தை கொடுத்து விட்டதாகவும், இவரை போலவே அனைத்து தயாரிப்பாளர்களும் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

தயாரிப்பாளர்கள் உரிய சம்பளத்தை தராமல் இழுத்தப்படிப்பது மற்றும் ஏமாற்றுவதால், தான் தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி மற்றும் விஷ்ணு விஷால் உள்ளிட்ட நடிகர்களே தயாரிப்பாளர்களாக மாறி வரும் சூழல் தமிழ் சினிமாவில் நிலவி வருகிறது.

பெரிய நடிகர்களே இதுபோன்ற குற்றச்சாட்டுகளை பொது மேடைகளில் கூறி வருகின்றனர் என்றால், அறிமுக நடிகர்கள் மற்றும் சாமானிய நடிகர்கள் மற்றும் கலைஞர்களுக்கு எப்படி சம்பளம் கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதே போலத்தான் பிரபல பாடலாசிரியர் நா. முத்துகுமார், பலருக்கும் பாடல் எழுதி கொடுத்து சம்பளம் கிடைக்காமல், வறுமையால் கவனிக்க முடியாமல் இறந்து போனார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அனல் பறக்கும் ஆக்ஷன் காட்சிகளோடு அசத்தும் வார் டிரைலர்!


Leave a reply