அமலாபால் யாருடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினார் தெரியுமா?

by Mari S, Sep 3, 2019, 08:40 AM IST

ஆடை படத்திற்கு பிறகு அமலா பால் கேரியரில் செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அந்த படத்தில் ஆடையின்றி சிறப்பாகவும், போல்ட்டாகவும் நடித்த அமலாபாலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. விரைவில் அவர் நடிப்பில் அதோ அந்த பறவை போல படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில், நேற்று நாடுமுழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நடிகை அமலாபாலும் தனது இல்லத்தில், விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினார். இயக்குநர் ஏ.எல். விஜய்யை பிரிந்து வாழும் நடிகை அமலாபால், இந்த விநாயகர் சதுர்த்தியை தனது செல்ல நாய்க்குட்டியான விண்டருடன் கொஞ்சி கொண்டாடினார்.

விண்டரை அமலாபால் தூக்கி வைத்துக் கொண்டு பூஜை அறையில், அமலாபால் நெற்றியிலும், விண்டர் நெற்றியிலும் குங்குமிட்டு, கும்பிட்ட புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றி வைரலாக்கி வருகிறார்.

மேயாதமான் படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபாலின் துணிச்சல் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஆடை திரைப்படத்திற்கு இந்த ஆண்டுக்கான சிறந்த தமிழ்படம் உள்ளிட்ட பல விருதுகள் கிடைக்கும் என்ற குஷியில் அமலாபால் அடுத்த கட்ட முயற்சியில் மேலும், துணிச்சலோடு இறங்கி செயல்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Leave a reply