சிவகார்த்திகேயன் ஹீரோவா? சூப்பர் ஹீரோவா?

by Mari S, Sep 3, 2019, 08:44 AM IST
Share Tweet Whatsapp

இரும்புத்திரை படத்தை இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ஹீரோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

விஷால், அர்ஜுன், சமந்தா நடிப்பில் வெளியான இரும்புத்திரை படம் கடந்த ஆண்டு மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது. விஷால் கேரியரில் அவருக்கு கிடைத்த மிகப்பெரிய படமாகவும் இரும்புத்திரை மாறியது.

டெக்னாலஜி துணை கொண்டு ஒயிட் டெவில் கதாபாத்திரத்தில் நடிகர் அர்ஜுன் மிரட்டியிருப்பார். அதனை முறியடிக்க ராணுவ வீரர் விஷால் படும் கஷ்டங்களையும் முயற்சிகளையும் கொண்டு ஆக்‌ஷன் த்ரில்லர் ஆக அந்த படம் உருவாகி இருந்தது.

அதனை தொடர்ந்து, தற்போது சிவகார்த்திகேயனை வைத்து பி.எஸ். மித்ரன் இயக்கி வரும் படத்திற்கு ஹீரோ என தலைப்பு வைத்துள்ளனர். வெளியிடப்பட்டுள்ள ஃபர்ஸ் லுக் போஸ்டரில், சிவகார்த்திகேயன் கையில் ஒரு மாஸ்க் இருக்கிறது.

மாஸ்க் அணிந்து, ஜோரோ போல ஏழைகளுக்கு உதவி செய்யப் போகிறாரா அல்லது பேட்மேன் போல சூப்பர் ஹீரோ பவருடன் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளாரா என்ற விவாதங்கள் இப்போதே கோலிவுட்டில் துவங்கி விட்டன.

சிவகார்த்திகேயன் நடிப்பில் நம்ம வீட்டு பிள்ளை ரிலீசுக்கு ரெடியாகி உள்ளது. அதே போல டிசம்பர் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டமாக ஹீரோ படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியான மிஸ்டர் லோக்கல் திரைப்படம் படு தோல்வியை அடைந்த நிலையில், சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த படங்கள் அவருக்கு மாஸ் வெற்றியை கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கின்றனர்.


Leave a reply