மக்கள் என்ன நாய்களா? சாக்ஷிக்கு வலுக்கும் கண்டனங்கள்!

by Mari S, Sep 6, 2019, 12:00 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொதுமக்களை நாய்கள் என சாக்‌ஷி கூறியதாக அவருக்கு எதிராக நெட்டிசன்கள் பலத்த கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனையும் வெற்றிகரமாக கமல்ஹாசன் துவக்கி வழங்கி வருகிறார். கடந்த இரு சீசன்களில் இல்லாத அளவுக்கு இந்த பிக்பாஸ் சீசன் சர்ச்சைகள் நிறைந்த சண்டைகளமாக மாறியுள்ளது.

மேலும், பல காதல்கள் கதையும் கவினுக்கு எதிராக ஒரு கோஷ்டியும் அவரை கேவலமாக கலாய்த்து வரும் அளவுக்கு இந்த பிக்பாஸ் மிகவும் மோசமாக போய்க் கொண்டிருக்கிறது.

நேற்றைய 74ம் நாள் நிகழ்ச்சியில், வனிதாவுக்கும் ஷெரினுக்கும் இடையே பலத்த சண்டை நிலவியது.

பின்னர், ஷெரின், தனியாக சென்று அழத் தொடங்கினார். அவரை சமாதானம் படுத்தும் பொருட்டு, சாக்‌ஷி அவர்கள் அவரிடம் பேச்சுக் கொடுத்தார். அப்போது ”நாய்கள் ரோட்டில் குரைக்கும் அதை நீ பொருட்படுத்தாதே.. நான் வெளியில் இருக்கும் மக்களை தான் சொல்கிறேன்” எனக் கூறி சிக்கலில் தானே வசமாக வந்து சிக்கிக் கொண்டார்.

வெளியில் உள்ள மக்களை எப்படி சாக்‌ஷி நாய்கள் எனக் கூறுவார், என அவருக்கு எதிராக நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்து மீம்கள் போட்டு தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.


More Cinema News