காட்டை புடுங்கிடுவானுங்க.. துட்ட புடுங்கினுவானுங்க.. கல்வியை புடுங்க முடியாது!

by Mari S, Sep 9, 2019, 08:15 AM IST
Share Tweet Whatsapp

வெற்றிமாறனின் அடுத்த தரமான படைப்பு தனுஷின் அடுத்த அட்டகாசமான நடிப்பு இவை இரண்டும் கலந்த அசுரன் டிரைலர் வெளியாகி வைரலாகி உள்ளது.

உனக்குத் தேவையானதை நீதான் அடிச்சு புடிச்சு வாங்கணும், காட்டை புடுங்கிடுவானுங்க.. துட்ட புடுங்கிடுவானுங்க.. ஆனா கல்வியை புடுங்க முடியாது என டிரைலரில் இடம்பெற்றுள்ள வசனம் படமாக தெரியவில்லை பலருக்கான பாடமாக தெரிகிறது.

வடசென்னை படத்திற்கு மீண்டும் தனுஷ், வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியுள்ள அசுரன் திரைப்படம். வெக்கை நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில், தனுஷுக்கு ஜோடியாக மலையாள லேடி சூப்பர்ஸ்டார் மஞ்சு வாரியர் நடித்துள்ளார். மேலும், பாலாஜி சக்திவேல், பிரகாஷ்ராஜ், கருணாசின் மகன் கெவின் என பலர் நடித்துள்ளனர்.

ஒவ்வொரு காட்சியிலும் கொலை வெறியும், ஆக்ரோஷமும் கண் முன்னே பிரதிபலிக்கும் விதமாக டிரைலர் அமைந்துள்ளது. வரும் அக்டோபர் 4ம் தேதி படம் ரிலீசாகவுள்ளது. அதற்குள்ளாகவாவது எனை நோக்கி பாயும் தோட்டா வெளியாகுமா என்பது சந்தேகம்தான்!


Leave a reply