ஜி.வி.பிரகாஷின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் !

சதீஷ் செல்வகுமார் இயக்கும் புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கிறார். அந்த படத்தின் பஸ்ட்லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என ஜி.வி.பிரகாஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சசி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், சித்தார்த் நடித்துள்ள சிவப்பு மஞ்சள் பச்சை படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மாமன் மச்சான் உறவை இந்த அளவிற்கு யாராலும் படத்தில் காட்ட முடியாது என படத்தை அனைவரும் புகழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜி.வி.பிரகாஷின் அடுத்தடுத்த படங்களான ஐங்கரன், அடங்காதே, 100%காதல், ஜெயில் போன்றவை ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மேலும் தனது அடுத்த படத்தின் விவரங்கள் பற்றி டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்த ஜி.வி.பிரகாஷ், அதில் தெரிவித்ததாவது; தனது அடுத்த படத்தை சதீஷ் செல்வகுமார் இயக்க ஆக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் சார்பில் டில்லி பாபு தயாரிப்பதாகவும், அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.

இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக மாடல் அழகியான திவ்யபாரதி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Advertisement
More Cinema News
nayanthara-birthday-celebration-with-vignesh-shivan-at-america
காதலனுடன் அமெரிக்காவில் சுற்றி திரியும் நடிகை...35வது பிறந்ததினத்தையும் கொண்டாடினார்...
suriyas-next-is-with-director-hari
மீண்டும் ஹரியுடன் இணையும் சூர்யா...வெற்றிமாறனுடனும் கைகோர்க்கிறார்...
kushboo-getting-beauty-treatment
அழகு சிகிச்சையில் குஷ்பு...நடிகர்-டாக்டரிடம் ஆலோசனை
actress-birigida-saga-excited-to-be-a-part-of-the-film
டிவியிலிருந்து சினிமாவுக்கு புரமோஷன் ஆகும் நடிகைகள்.. ரம்யா, டிடியை  தொடர்ந்து இப்போது பவி டீச்சர்..
priyanka-nicks-bought-a-new-house-worth-20-mn
அமெரிக்காவில் ரூ 142 கோடிக்கு பங்களா வாங்கிய நடிகை... பெரிய நீச்சல் குளம், 7 பெட்ரூம் 11 பாத்ரூம்,  சினிமா தியேட்டர்...  
hansika-motwani-doing-a-web-series
சினிமாவிலிருந்து வெப் சீரிஸுக்கு தாவிய நடிகை.. ராதிகா ஆபதே... நித்யா மேனன் பாணிக்கு மாறினார்...
vaigai-puyal-vadivelu-in-trouble-again
கமல், அஜீத் படத்தில் நடிக்கவிருந்த வடிவேலு.. ரூ. 1 கோடி கேட்டு ஆப்பு வைத்த தயாரிப்பாளர்...
nayanthara-vignesh-shivan-hang-out-with-boney-and-khushi-kapoor-in-nyc
நயன்தாராவுக்கு தயாரிப்பாளர் அமெரிக்காவில் விருந்து... அஜீத் படத்தில் நடிக்க கிரீன் சிக்னல்...
bigg-boss-contestant-raiza-wilson-sexy-comment
அரைகுறை ஆடையில் ரைஸா.. கிளுகிளு மெசேஜ் வெளியிட்டார்...
sanga-thamizhan-producer-clears-financial-issues
இரவில் ரிலீஸ் ஆன சங்கத்தமிழன்...விஜய்சேதுபதி ரசிகர்கள் குஷி...
Tag Clouds