தனுஷுக்கு எம்.ஜி.ஆர் பட தலைப்பு !

by Mari S, Sep 10, 2019, 19:12 PM IST
Share Tweet Whatsapp

தனுஷ் ஹீரோவாக நடிக்க கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படம் லண்டனில் படமாக்கப்பட்டு வருகிறது, இந்த படத்திற்கு எம்.ஜி.ஆர் படத்தின் தலைப்பை வைக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்த வருடம் பேட்ட படத்தை இயக்கி ஹிட் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் தனுஷை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை வை நாட் ஸ்டுடியோஸ் சார்பில் ஷஷிகாந்த் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார்.

இந்த படத்திற்கு எம்.ஜி.ஆர் படத்தின் தலைப்பான உலகம் சுற்றும் வாலிபன் என்ற பெயரை வைத்தால் பொருத்தமாய் இருக்கும் என அந்த படத்தின் பெயர் உரிமத்தை சென்னை வந்ததும் பெற படக்குழு திட்டமிட்டுள்ளது.

மேலும் ஏற்கனவே, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள நம்ம வீட்டு பிள்ளை படத்திற்கு எங்கள் வீட்டு பிள்ளை என்ற எம்.ஜி.ஆர் படத்தின் தலைப்பை வைக்க படக்குழு திட்டமிட்டிருந்தது, ஆனால் அந்த படத்தின் பெயர் உரிமத்தை தர மறுத்துவிட்ட காரணத்தால் நம்ம வீட்டு பிள்ளை என பெயரிடப்பட்டது.

அதனால் தனுஷ் படத்திற்கு எம்.ஜி.ஆர் பட தலைப்பு கிடைக்குமா என்பதில் அனைவரும் ஆர்வத்துடன் உள்ளனர்.


Leave a reply