கணவரை கண்ணீர் வடிக்க செய்த பிரியங்கா சோப்ரா!

by Mari S, Sep 11, 2019, 10:26 AM IST
Share Tweet Whatsapp

பாலிவுட் நடிகை பிரியங்கோ சோப்ரா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் தனது கணவர் நிக் ஜோனஸை அழ வைத்துவிட்டதாக கூறியுள்ளார். 


கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என உலகம் முழுக்க தனது நடிப்பாற்றலால் அறியப்படும் நடிகை பிரியங்கா சோப்ரா, இவர் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் தி ஸ்கை இஸ் பிங்க்.
நோய் எதிர்ப்பு குறைபாடுடன் பிறந்து, வறுமையில் தனது தாயால் பல கஷ்டங்களுக்கு இடையே பாதுகாக்க வளர்க்கப்பட்ட, இளம் ஊக்க பேச்சாளர் ஆயிஷா சவுத்ரி பயோபிக் படத்தில் பிரியங்கா நடித்துள்ளார். இந்த படத்தில் ஆயிஷாவின் அம்மா கதாபாத்திரத்தில் மிகவும் உருக்கமான அழுகை காட்சி ஒன்றில் பிரியங்கா நடிக்கும் பொழுது அந்த செட்டே அமைதியாக இருந்தது. அப்போது ஒருவர் மட்டும் ஓரத்தில் நின்று கொண்டு அழும் சத்தம் கேட்க, இயக்குநர் சோனாலி, நீங்கள் உங்கள் கணவரை அழ வைத்துவிட்டீர்கள் பிரியங்கா எனக் கூறி சிரித்தாராம்.

இந்த சுவாரஸ்யமான நிகழ்வை சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் பிரியங்கா.


Leave a reply