தீபாவளி மிரட்டலுக்கு கார்த்தியும் தயார் – வெறித்தனமான கைதி ஸ்டில்ஸ்!

by Mari S, Sep 12, 2019, 17:35 PM IST
Share Tweet Whatsapp

பிகிலுக்கு சரியான போட்டியாக கார்த்தியின் கைதி படம் இருக்கும் என தற்போது வெளியாகி இருக்கும் அதன் புதிய புகைப்படங்களே விளக்குகின்றன.

வரும் தீபாவளிக்கு விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி மற்றும் விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் ஆகிய 3 படங்கள் போட்டியிடும் என்ற அறிவிப்பு வெளியாகின. ஆனால், இந்த ரேசில் கலந்து கொள்ளாமல், விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் அக்டோபர் 4ம் தேதியே வெளியாகும் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

பிகில், கைதி போட்டி மட்டும் உறுதியாகியுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் ரிலீஸ் வரும் 19ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

இந்நிலையில், கார்த்தியின் கைதி படத்தின் புரமோஷனையும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் ஆரம்பித்துவிட்டது.

கைதி படத்தில் இருக்கும் கார்த்தியின் வெறித்தனமான லுக் போஸ்டர்கள் மற்றும் காட்சி படங்களை தற்போது வெளியிட்டு வைரலாக்கி வருகிறது.

விஜய்யின் 64வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதால், விஜய் ரசிகர்களும் கைதி புகைப்படங்களை ஆர்வமாக பகிர்ந்து வருகின்றனர்.


Leave a reply