சங்கத்தமிழனின் சண்டக்காரி இவதான்!

by Mari S, Sep 13, 2019, 20:08 PM IST

விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள சங்கத்தமிழன் படத்தில் இடம்பெற்றுள்ள சண்டக்காரி நீதான் பாடல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

வாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய்சந்தர் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகி வரும் படம் சங்கத்தமிழன். இந்த படம் வரும் தீபாவளி அல்லது அதற்கு முன்பாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளர் விவேக் மெர்வின் இசையில், அனிருத் குரலில் உருவாகியுள்ள சண்டக்காரி நீதான் பாடல் வீடியோ வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது.

இந்த பாடலில், கிராமத்து கெட்டப்பில் கணவன், மனைவியாக காட்சி தரும் விஜய்சேதுபதி மற்றும் நிவேதா பெத்துராஜின் கெமிஸ்ட்ரி வேற லெவலில் இருக்கிறது.

கருப்பன் படத்திற்கு பிறகு விஜய்சேதுபதிக்கு, இதுமாதிரியான ஒரு ரம்மியமான காதல் பாடல், அதுவும் அனிருத் குரலில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சங்கத்தமிழன் படத்தில் ராஷி கண்ணா மற்றொரு நாயகியாக நடித்துள்ள நிலையில், யார் முதன்மையான நாயகி என்ற சந்தேகமும் தற்போது கிளம்பியுள்ளது.


Leave a reply