கடைக்குட்டி சிங்கத்தின் அடுத்த பாகமா நம்ம வீட்டு பிள்ளை?

by Mari S, Sep 14, 2019, 20:12 PM IST

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள நம்ம வீட்டு பிள்ளை டிரைலர் தற்போது வெளியாகி யூடியூபில் வைரலாகி வருகிறது.

பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான கடைக்குட்டி சிங்கம் மாபெரும் வரவேற்பையும் வெற்றியும் பெற்றது. அதனை தொடர்ந்து அவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தான் நம்ம வீட்டு பிள்ளை. சன் பிக்சர்ஸ் சார்பில் விரைவில் வெளியாகவுள்ள இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.

டிரைலரை பார்த்த பலரும், என்னடா இது கடைக்குட்டி சிங்கம் படத்தின் அடுத்த பாகமா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

கடைக்குட்டி சிங்கம் படமும் சொந்த பந்தங்களின் பாசத்தையும் அதற்குள் நடக்கும் ஈகோ சண்டைகளையும் மையமாக வைத்து, இறுதியில் சொந்த பந்தங்களை நாயகன் எப்படி ஒன்று சேர்த்தார் என்ற முறையிலே படம் நிறைவடையும்.

இந்த படத்திலும் சொந்த பந்தங்கள் சந்தோஷத்தையும் கொடுக்கும், சண்டையையும் வரவழைக்கும் என்ற அதே டெம்பிளேட்டிலே படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார் என்பது டிரைலரிலே தெரிகிறது.

சிவகார்த்திகேயனின் கடந்த இரு படங்களான சீமராஜா மற்றும் மிஸ்டர் லோக்கல் திரைப்படம் படு தோல்வியை தழுவிய நிலையில், இந்த படமாவது அவருக்கு கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Cinema News

அதிகம் படித்தவை