மாஃபியா செமயா இருக்கு.. ரஜினியே சொல்லிட்டாரு!

Mafia was prasied by super star rajinikanth

by Mari S, Sep 14, 2019, 17:59 PM IST

துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் அறிமுகமான கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஃபியா திரைப்படம் செமயா இருக்கு என ரஜினி பாராட்டியதாக இயக்குநர் கார்த்திக் நரேன் நெகிழ்ச்சி ட்வீட் செய்துள்ளார்.

கம்மி பட்ஜெட்டில் ஒன்றரை மாதத்திற்குள் எடுக்கப்பட்டு மாபெரும் வெற்றியை ருசித்த படம் துருவங்கள் பதினாறு. இந்த படத்தின் மூலம் இயக்குநராகவும் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷமாகவும் கார்த்திக் நரேன் பாராட்டப்பட்டார்.

அடுத்ததாக, கெளதம் மேனன் தயாரிப்பில் நரகாசூரன் படத்தை இயக்கிய கார்த்திக் நரேனுக்கு கெளதம் மேனன் தயாரிப்பு தொடர்பாக சில பிரச்னைகள் ஏற்பட அவரிடத்தில் இருந்து வெளியேறி, அந்த படத்தை வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்திடம் ஒப்படைக்க, இன்றளவும் படம் திரைக்கு வரமுடியாமல் தவித்து வருகிறது.

இந்த பிரச்னைகளுக்கு நடுவே லைகா தயாரிப்பில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர் நடிப்பில் மாஃபியா என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார் நரேன் கார்த்திக். விரைவில் வரவுள்ள அந்த படத்தின் டீசரை ரஜினிக்கு போட்டு காண்பிக்க, டீசரை பார்த்த ரஜினி, பிரில்லியண்ட் கண்ணா படம் செமயா வந்திருக்கு என பாராட்டியுள்ளார். ரஜினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்து தனது அனுபவத்தையும் ஷேர் செய்துள்ளார் கார்த்திக் நரேன்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை