ரசிகர்கள் ரொம்ப டார்ச்சர் பண்றாங்க – டாப்ஸி அப்செட்!

Fans love makes trouble says Tapsee

by Mari S, Sep 18, 2019, 20:09 PM IST

நடிகை டாப்ஸி சாதாரணமாக வெளியே செல்ல முடியவில்லை என்றும், நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் நேரம் செலவழிக்க விடாமல் ரசிகர்கள் டார்ச்சர் செய்வதாக டாப்ஸி கருத்து தெரிவித்துள்ளார்.

ஆடுகளம் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான டாப்ஸி, டோலிவுட், பாலிவுட் என தன்னை தானே உயர்த்திக் கொண்டு நடித்து வருகிறார்.

பாலிவுட்டில் இவர் நடிப்பில் வெளியான பிங்க், பாட்லா படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், சமீபத்தில் வெளியான மிஷன் மங்கள் திரைப்படத்திலும் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

பாலிவுட்டில், கங்கனா ரனாவத்தின் இடத்தை டாப்ஸி பிடித்து விட்டதாக, கங்கனாவின் சகோதரி ரங்கோலியே இவர் மீது நேரடி குற்றச்சாட்டை வைத்திருந்தார்.

இந்நிலையில், பொது இடங்களில் சாதாரணமாக நண்பர்களுடனோ அல்லது குடும்பத்தினருடனோ செல்ல முடிவதில்லை. ரசிகர்களின் அன்பு ஒரு கட்டத்தில் மிகப்பெரிய டார்ச்சராகி வருகிறது. நடிகர்களை பெரிய பிம்பங்களாக பார்க்காமல் சக உயிராக பார்க்க ரசிகர்கள் பழகி கொள்ள வேண்டும். நடிகர்களுக்கான பிரைவசியில் ரசிகர்கள் தலையிடுவதை தவிர்த்தால் நன்றாக இருக்கும் என்றும் டாப்ஸி கூறியுள்ளார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை