70 கிலோ எடையை தூக்கிய ஆலியா பாட்.. ஏன் தெரியுமா?

by Mari S, Sep 18, 2019, 20:09 PM IST

பாகுபலி இயக்குநரின் அடுத்த படைப்பான ஆர்.ஆர்.ஆர் படத்தில் ஆலியா பாட் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்திற்காக ஃபிட் ஆகும் முயற்சியில் ஈடுபட்டு வரும் ஆலியா, சமீபத்தில் 70 கிலோ எடையை தூக்கி பயிற்சி செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

பாகுபலியின் மாபெரும் வெற்றிக்கு பிறகு, ராஜமெளலி உலக அரங்கில் மிகப்பெரிய இயக்குநராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். அவரது அடுத்த படமான ஆர்.ஆர்.ஆர் படம் குறித்த எதிர்பார்ப்பு இந்தியாவை தாண்டி உலக அரங்கில் தற்போதே அதிகரித்துள்ளது.

இந்த படத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நாயகர்களாக நடிக்கின்றனர். ஆலியா பாட் ராம் சரணுக்கு ஜோடியாக நடிக்கிறார். நாயகர்களுக்கு சமமாக நாயகி ஆலியா பாட்டும் ஸ்டண்ட் செய்ய வேண்டி இருப்பதால், ராஜமெளலியின் அறிவுரையை ஏற்று சில மாதங்களாக கடின உடற்பயிற்சி செய்து வரும் ஆலியா பாட், சமீபத்தில் 70 கிலோ எடையை தூக்கி பயிற்சி செய்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பாகுபலி படத்திற்காக பிரபாஸ் மற்றும் ராணா, பயங்கர உடற்பயிற்சி செய்து சிக்ஸ்பேக் கொண்டு வந்தனர். இந்த படத்தில் நடிப்பதற்காக நாயகர்களுக்கு இணையாக நாயகி ஆலியா பாட்டும் கடின உடற்பயிற்சி செய்து வருகிறாராம்.

Get your business listed on our directory >>More Cinema News

அதிகம் படித்தவை