என்னடா வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வரை இப்படி ஆக்கி வச்சிருக்கீங்க?

by Mari S, Sep 20, 2019, 18:46 PM IST

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி உள்ளது.

கிரந்தி மாதவ் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்திற்கு வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற அசத்தல் டைட்டிலை வைத்தது மட்டுமின்றி, ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷி கண்ணா, கேத்தரின் தெரசா, இசபெல்லா என நான்கு பேர் நாயகிகள் என்ற அறிவிப்பும் வெளியானது.

இப்படி இருக்க தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. நான்கு நாயகிகளுடன் குஷி மோடில் விஜய் தேவரகொண்டா உல்லாச போஸ் கொடுப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, காதலித்து பின்னர் நடுத்தெருவுக்கு வந்த தேவதாஸ் லுக்கில் விஜய் தேவரகொண்டாவை கர்ண கொடூரமாக ஃபர்ஸ்ட் லுக்கில் காட்டியுள்ளனர்.

இந்த ஃபர்ஸ்ட் லுக்கின் மூலம், வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் படம் இன்னொரு தேவதாஸ் படமாக வருமா என்ற கணிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது.

Get your business listed on our directory >>More Cinema News

அதிகம் படித்தவை