பிகில் படத்தின் மொத்த ஆல்பம் ஜூக் பாக்ஸை சோனி நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆனால், இது ரசிகர்களை ஈர்ப்பதாக அமைந்துள்ளதா என்பதில் தான் கேள்விக்குறி எழுகிறது.
ஏஜிஎஸ் கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் மிக பிரம்மாண்ட செலவில் உருவாகியுள்ள பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
விழாவில் நடிகர் விஜய் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் பலரது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களாகவும், தலைப்பு செய்திகளாகவும், அரசியல்வாதிகளின் ஆதரவு மற்றும் எதிர்ப்பு குரலாகவும் மாறி உள்ளன.
இந்நிலையில், சோனி நிறுவனம் சார்பில் தற்போது பிகில் முழு ஆல்பம் அடங்கிய ஜூக் பாக்ஸ் வெளியிடப்பட்டுள்ளது.
பிகில் படத்தில் இடம்பெற்றுள்ள சிங்கபெண்ணே, வெறித்தனம் மற்றும் உனக்காக பாடல்கள் ஆடியோ லாஞ்சிற்கு முன்னதாகவே வெளியிடப்பட்டு விட்ட நிலையில், ஜூக் பாக்ஸில் புதுசா ரஹ்மான் என்ன பாட்டு போட்டுருக்காரு என ஆவலோடு பார்த்த அனைவருக்கும் மிகப்பெரிய ஏமாற்றம் தான்.
சின்மயி குரலில் மாதரே பாடல் பெண்களின் வலிகளையும் ஆண்களின் அடக்குமுறைகளையும் சித்தரிக்கும் ஸ்லோ எமோஷனல் பாடல் ஒன்றும், பிகிலு பிகிலுமா என்ற வெறும் மியூசிக் மட்டுமே இசைக்கப்பட்டுள்ள பாடலும் தான் இடம்பெற்றுள்ளது.
மெர்சல் ஆல்பத்திற்கு இணையாக பிகில் ஆல்பத்தை சொல்ல முடியுமா என்ற சந்தேகம் பல விஜய் ரசிகர்கள் மத்தியிலே எழுந்துள்ளது.
இத்தனை கோடி செலவு செய்து ஆடியோ வெளியீட்டு விழா வைப்பதற்கு பதில், இந்த இரண்டு பாடலையும் இணையத்திலே வெளியிட்டு இருக்கலாமே என்றும் கமெண்டுகள் குவிந்து வருகிறது.