சங்கத்தமிழனில் விஜய்சேதுபதிக்கு டபுள் ஆக்ஷனா?

by Mari S, Sep 20, 2019, 19:23 PM IST

விஜய்சேதுபதியின் மாஸ் காட்டும் சங்கத்தமிழன் டிரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

கீழ எவ்ளோ பேர் இருக்காங்க.. நீ எப்டிடா மேல வந்த என்ற வசனத்துக்கு, அத ஏன் என் கிட்ட கேக்குற கீழ இருக்கிறவங்க கிட்ட போய் கேளு என பட்டாசு கிளப்பும் வசனத்துடன் விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் டிரைலர் தொடங்குகிறது.

சங்கத்தமிழன் படத்தில் ஒரு விஜய்சேதுபதி போலீஸ் ஆகவும், மற்றொரு விஜய்சேதுபதி வில்லேஜ் கெட்டப்பிலும் காட்டு கின்றனர். ஆனால், இதுவரை படத்தில் விஜய்சேதுபதி டபுள் ஆக்‌ஷன் என இயக்குநர் விஜய் சந்தர் அறிவித்ததாக தகவல் இல்லை.

இருந்தாலும், படத்தின் டிரைலரை உற்று நோக்கினால், டபுள் ஆக்‌ஷன் என்பது போல தெரிகிறது. தீபாவளி வெளியீடு என்று சொல்லாமல், அக்டோபர் வெளியீடு என்றே குறிப்பிட்டுள்ளதால், சங்கத்தமிழன் தீபாவளிக்கு முன்னதாகவே வெளியாகும் என்பது உறுதியாகி உள்ளது.

நிவேதா பெத்துராஜ், ராஷி கண்ணா என இரு ஜோடிகள், ரயிலில் விஜய்சேதுபதி வந்து இறங்கும் போது அவரை ஊரே வணங்குவதும், அதற்கு அவர் புதிதாக பார்ப்பது போன்ற ரியாக்‌ஷன் கொடுப்பதும், டபுள் ஆக்‌ஷன் படம் என்ற சந்தேகத்தை தெளிவாக உறுதி செய்கிறது. அந்த ட்விஸ்டை அவர்களாக சொல்லும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்!


More Cinema News