காமெடி நடிகர் சதிஷ் இனி கமிட்டட்!

by Mari S, Sep 21, 2019, 11:13 AM IST

காமெடி நடிகர் சதிஷுக்கு நிச்சயதார்த்தம் ஆகியுள்ளது. அவரது நிச்சய்தார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

சிவகார்த்திகேயனின் நண்பரும் காமெடி நடிகருமான சதிஷ், சிவகார்த்திகேயனுடனே தமிழ் சினிமாவில் அறிமுகமாகி எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, ரெமோ, மிஸ்டர் லோக்கல் என பல படங்களில் அவருடன் நடித்துள்ளார்.

மேலும், நடிகர் விஜய்யுடன் கத்தி, பைரவா படத்தில் நடித்த சதிஷ், வேறு சில முன்னணி நடிகர்களுடனும் நடித்து வருகிறார்.

நடிகை கீர்த்தி சுரேஷுடன் சதிஷுக்கு திருமணம் ஆவப்போவதாக வதந்திகள் இணையத்தில் கிளம்பின. மேலும், வேறு சில நடிகைகளுடனும் துணை நடிகைகளுடனும் சதிஷுக்கு திருமணம் நடந்து விட்டதாகவும், குழந்தைகள் இருப்பதாகவும் வதந்திகள் கிளம்பின.

தற்போது அவை அத்தனைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக குடும்பத்தினர் புடை சூழ சதிஷுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சினிமா பிரபலம் ஒருவரின் மகள் தான் மணப்பெண் என்றும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Cinema News

அதிகம் படித்தவை