அஜித் பட தயாரிப்பாளர் மீது மோசடி வழக்கு

Case filed against on Vivegam Producer

by Mari S, Sep 21, 2019, 19:59 PM IST

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான விவேகம் படத்தின் தயாரிப்பாளரான சத்யஜோதி பிலிம்ஸ் தியாகாரஜன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2017 ஆகஸ்ட் 24ம் தேதி நடிகர் அஜித், காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான படம் விவேகம். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். வழக்கம் போல், சிவா படங்களுக்கு தயாரிப்பு பணியை செய்யும் சத்யஜோதி நிறுவனம் தான் விவேகம் படத்தையும் தயாரித்து இருந்தது. இந்த படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடித்திருந்தார்.

வீரம், வேதாளம் படங்களுக்கு பிறகு மீண்டும் சிவாவுடன் இணைந்த நடிகர் அஜித்துக்கு விவேகம் படம் மற்ற இரண்டு படங்களை விட படுதோல்வியை கொடுத்தது.

இந்நிலையில், விவேகம் படத்தின் வெளிநாட்டு உரிமை வழங்கியதில் படத்தயாரிப்பு நிறுவனம் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை எழும்பூர் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அஜித், நயன்தாரா நடிப்பில் இந்த ஆண்டின் துவக்கத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாகி மாபெரும் வசூல் சாதனையை படைத்த விஸ்வாசம் படத்தையும் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்தது குறிப்பிடத்தக்கது.

You'r reading அஜித் பட தயாரிப்பாளர் மீது மோசடி வழக்கு Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை