தமன்னாவின் புதிய படத்தில் விஜய்யின் குட்டிக்கதை மற்றொரு பேய் படமாக பெட்ரோமாக்ஸ்

Tamanna in Petromax

by Chandru, Oct 1, 2019, 15:23 PM IST

பிகில் பட பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் குட்டிக்கதை ஒன்றை கூற அது இணைய தளத்தில் பரபரப்பாகவும், சர்ச்சயைாகவும் மாறிவிட்டது. அதை ஞாபகப்படுத்தும் வகையில் தமன்னா புதிய படத்தின் டிரெய்லரில் விஜய் குட்டிகதையுடன் ஒரு சீன் ஓடுகிறது.

தமன்னா நடிப்பில் ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள கதையாக உருவாகியிருக்கிறது 'பெட்ரோமாக்ஸ்' இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அதன் ஆரம்பமே தொலைக்காட்சியில் ஒன்றில் நான் ரொம்ப ரசிச்ச ஒரு குட்டிக்கதை சொல்கிறேன் என்று விஜய் கூறுவது போன்ற காட்சி உள்ளது. அதுபோல்சிங்கம் படத்தில் சூர்யா பேசும் வசனம், வைதேகி காத்திருந்தாள் படத்தில் கவுண்டமணி பேசும் பெட்ரோமாக்ஸ் லைட் வசனமும் டிரைலரின் இறுதியில் உள்ளது, அதே கண்கள் இயக்குனர் ரோஹின் வெங்கடேசன் இயக்கி உள்ளார். டேனி ரெய்மாண்ட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

ஏற்கனவே பேய் கதையாக உருவான தேவி படத்தில் நடித்த தமன்னா மீண்டும் மற்றொரு பேய் படத்தில் நடித்திருக்கிறார். யோகிபாபுவின் காமெடி, கம்ப்யூட்டர் கிராபிக்ஸில் வரும் பேய்க்காட்சிகள், ஜிப்ரானின் பின்னணி இசை என படம் முழுவதும் பயமும் சிரிப்பும் கலந்த கலவையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You'r reading தமன்னாவின் புதிய படத்தில் விஜய்யின் குட்டிக்கதை மற்றொரு பேய் படமாக பெட்ரோமாக்ஸ் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை