கடைக்குட்டி சிங்கம் கார்த்தியின் உழவுப்பணி..

by Chandru, Oct 4, 2019, 18:11 PM IST

நடிகர் சூர்யா அகரம் பவுண்டேஷன் மூலம் கல்வி பணியாற்றி வருகிறார். அவரது தம்பி நடிகர் கார்த்தி, உழவன் ஃபவுண்டேஷன் அமைப்பு தொடங்கி அதன் மூலம் வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளை செய்து வருகிறார்.

உழவர் விருதுகள் என்ற பெயரில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட உழவர்கள் ஐந்து பேரை தேர்ந்தெடுத்து தலா 1 லட்சம் காசோலை, விருதுகளையும்,. மரம் கருணாநிதி ஆற்றும் சுற்றுச்சூழல் சேவைக்காக 50 ஆயிரமும் வழங்கினார்.

திருவண்ணாமலையில் 83 ஏக்கர் பரப்பளவுள்ள விண்ணமலை ஏரியை சீரமைத்து வருகின்றனர். சிறு குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் விவசாயத்திற்கான கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு 1.50 இலட்சத்திற்கான பரிசுப் போட்டி அறிவித்துள்ளது.

தற்போது காற்று மாசுபாடுகளை குறைக்கவும் சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் தொழிற்சாலைகள் அதிகம் நிரம்பியுள்ள மறைமலைநகரில் மரக்கன்றுகள் நடுவதற்கான பணிகள் ஆம்பினால் ஆம்னிகனெக்ட் என்ற நிறுவனத்துடன் சேர்ந்து இன்று தொடங்கப்பட்டது.


More Cinema News