நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை எப்போது?.. ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..

South Indian Artist Association Election Votes Counting High Court Order

by Chandru, Oct 4, 2019, 22:49 PM IST

சென்னையில் உள்ளது தென்னிந்திய நடிகர் சங்கம். இதன் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் கடந்த ஜூன் மாதம் 23-ந்தேதி நடைபெற்றது. நடிகர் நாசர். விஷால் அணியும்.

கே.பாக்ர்யராஜ் அணியும் போட்டியிட்டன. முன்னதாக இந்த தேர்தலை ரத்து செய்து சங்கங்களின் பதிவாளர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து, நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கோர்ட்டு திட்டமிட்டப்படி தேர்தலை ஜூன் 23-ந் தேதி நடத்தி கொள்ள அனுமதி வழங்கியது. மேலும், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் பெஞ்சமின் என்பவர் தாக்கல் செய்த மனுவில், நடந்து முடிந்த தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க தேர்தலில் என்னை வாக்களிக்க அனுமதிக்கவில்லை. வெளியூர் களில் உள்ள சங்கத்தின் உறுப்பினர்கள் தபால் மூலம் வாக்களிக்க வேண்டும். தேர்தலுக்கு முதல் நாள் வரை வாக்களிக்கும் படிவம் எனக்கு கொடுக்கப்படவில்லை. எனவே தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார். இதே கோரிக்கையுடன் ஏழுமலை என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தார்.
விஷால் தரப்பில் வாக்கு எண்ணிக்கையை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டது.

இந்த வழக்கு, நீதிபதி கல்யாண சுந்தரம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கு விசாரணையை வருகிற15-ந் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி,அன்றைய தினம் நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

You'r reading நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை எப்போது?.. ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை