ஹிருத்திக் ரோஷன் விந்து தானம் செய்ய வேண்டும்.. கிரிக்கெட் வர்ணனையாளரின் குசும்பு..

by Chandru, Oct 6, 2019, 17:25 PM IST

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரும், கிரிக்கெட் வர்ணனையாளருமாக பணியாற்றுபவர் பாவனா. இவர், நடிகர் ஹிருத்திக் ரோஷன் விந்தணு தானம் செய்ய வேண்டும் என்று கூறி பரபரப்ப்பு ஏற்படுத்தியுள்ளார்.பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ள வார் என்ற இந்தி படம் திரைக்கு வந்திருக்கிறது. இதில் டைகர் ஷெராப்பும் நடித்துள்ளார்.

வார் படம் பற்றி விமர்சனம் செய்திருக்கும் பாவனா பாலகிருஷ்ணன் தனது டிவிட்டர் பக்கத்தில் பரபரப்பும், குசும்பும கலந்த மெசேஜ் வெளியிட்டுள்ளார்.

அதில்,'வார் படத்தை பார்க்கும் ஆண்கள் அதில் இடம்பெற்றிருக்கும் ஆக்‌ஷன் காட்சி, கார் சேசிங் மற்றும் ஹாலிவுட் படத்துக்க இணையான சண்டை காட்சிகளுக்காக படத்தை ரசிப்பார்கள். இப்படம் பெண்களுக்கு பிடிக்க இரண்டு காரணங்கள் உள்ளது. அதில் நடித்திருக்கும் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷெராப். இருவரும் அவ்வளவு கவர்ச்சியாக இருக்கிறார்கள்.

ஹிருத்திக் இன்னும் நிறைய படங்களில் நடிக்க வேண்டும். அவர் தனது விந்தணுவை தானம் செய்ய முன்வர வேண்டும்' என தெரிவித்துள்ளார்.


More Cinema News