தமிழ் காஞ்சனா இந்தியில் லட்சுமி பாம் ஆனது.. திருநங்கை வேடத்தில் அக்‌ஷய்குமார்..

actor Akshay Kumar Laxmi Bomb first look Released Tamil movie Kanchana

by Chandru, Oct 6, 2019, 17:32 PM IST

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா படம் 2011-ல் திரைக்கு வந்து வசூல் சாதனை நிகழ்த்தியது. இப்படம் கன்னடம், சிங்களம் மற்றும் வங்காள மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. 8 ஆண்டுகளுக்கு லட்சுமி பாம் என்ற இந்தியில் ரீமேக் ஆகிறது. இதில் அக்‌ஷய்குமார், கியாரா அத்வானி நடிக்கின்றனர். லாரன்ஸ் இயக்குகிறார். லட்சுமி இப்படம் அடுத்த வருடம் ஜூன் மாதம் 5-ந்தேதி திரைக்கு வரவுள்ளது.

முன்னதாக படப்பிடிப்பில் தயாரிப்பாளருடன் மோதல் ஏற்பட்டு லாரன்ஸ் விலகினார். பின்னர் சமரச பேச்சுக்கு பின் மீண்டும் இயக்க சம்மதித்தார். காஞ்சனா படத்தில் திருநங்கையாக சரத்குமார் நடித்து இருந்தார். அந்த கதாபாத்திரத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. காஞ்சனா படத்தில் லாரன்ஸ் சில காட்சிகளில் திருநங்கையாக வருவார்.

அதுபோல் இந்தியில் அக்‌ஷய்குமாரும் சில காட்சிகள் திருநங்கையாக நடிக்கிறார். திருநங்கை கெட்டப்பை அக்‌ஷய்குமார் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
“பெண் தெய்வத்தை வணங்குவதுதான் நவராத்திரி. இந்த நல்ல நாளில் எனது லட்சுமி தோற்றத்தை பகிர்கிறேன். இந்த கதாபாத்திரத்தை ஆர்வமாக எதிர்பார்க்கிறேன். அதே நேரம் பதற்றமாகவும் உள்ளது.” என்று பதிவிட்டுள்ளார்.

You'r reading தமிழ் காஞ்சனா இந்தியில் லட்சுமி பாம் ஆனது.. திருநங்கை வேடத்தில் அக்‌ஷய்குமார்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை