நேட்டா படத்தில் நடித்தவர் விஜயதேவர கொண்டாவுக்கும் ராஷ்மிகாவுக்கும் காதல் என்று திரையுலகில் நீண்ட நாட்களாகவே கிசுகிசு பரவி வருகிறது.
அதற்கு காரணம் அவர்கள் இருவரும் தெலுங்கில், பெல்லி சூப்புடு, கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் படங்களில் இணைந்து நடித்திருந்தனர். ஒரேஜோடி, அதுவும் படத்துக்கு படம் லிப் டு லிப் கிஸ்ஸடித்து நடித்த ஜோடிகளைப்பற்றி காதல் கிசு கிசு எப்படி வராமல் இருக்கும்.
இந்த காதல் கிசு கிசு சினிமா வர்த்தகத்துக்கு பிரயோஜனப்பட்டாலும் ராஷ்மிகா குடும்பத்தில் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியது. இதையடுத்து ராஷ்மிகா ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்.
இனி குறைந்தபட்சம் 2 ஆண்டுகளுக்கு விஜய்தேவரகொண்டாவுடன் இணைந்து நடிப்பதில்லை என்பதே அந்த முடிவாம். இந்த அறிவிப்பு விஜய்தேவர்கொண்டா ராஷ்மிக இர்த்ரப்பு ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் திரையுலகினரோ ராஷ்மிகாவின் இந்த அறிவிப்பு எத்தனை நாட்களுக்கு தாக்குப் பிடிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என திரையுலகினர் முணுமுணுக்கின்றனர்.