விஜய் நடிக்கும் பிகில் படத்தை கிட்டதட்ட முடித்துவிட்ட இயக்குனர் அட்லி அடுத்து தெலுங்கு படம் இயக்க உள்ளார். ஜூனியர் என்.டி.ராமராவுக்கு அவர் கதை சொல்லி ஒகே செய்திருப்பதாக டோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.
ஜூனியர் என்டிஆர் தற்போது ராஜமவுலி இயக்கத்தில் ஆர் ஆர் ஆர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அட்லி படத்தில் நடிக்க உள்ளாராம்.
அதேபோல் இந்தி நடிகர் ஷாருக்கானுக்கும் ஒரு கதை சொல்லியிருக் கிறார் அட்லி.














