நடிகை இலியானா திரையுலகில் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார். இதற்காக தனது காதலன் ஆன்ட்ரு நிபோன் உடன் பிரேக் அப் செய்துகொண்டார். உடல் அழகையும் ஸ்லிம்மாக்கி வருகிறார்.
ஆனாலும் இலியானா வெயிட் போட்டு குண்டாகிவிட்டதாகவும், அவரது அழகான இடுப்பழகும் காணாமல்போய்விட்டதாகவும் சிலர் நக்கலடித்தவண்ணம் இருக்கின்றனர். அதை கண்டுகோபம் அடைந்த இலியானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டூபீஸ் நீச்சல் உடை அணிந்து குளோசப் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உடலழகை நிரூபித்திருக்கிறார்.
ஸ்லிம்மாகவும், ஃபிட்டாகவும், இடுப்பழகும் குன்றாமல் நீச்சல் உடை அணிவதற்கு ஏற்ற தோற்றத்தில் அழகாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார் இலியானா
இதுகுறித்து இலியானா வெளியிட்டுள்ள மெசேஜில்,'நீச்சல் உடையின் அங்கீகாரத்துக்கான புகைப்படம்' என குறிப்பிட்டுள்ளார்.