லண்டன் பாய்பிரண்ட் மைக்கேல் கோர்சேல் உடனான காதலை நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் பிரேக்கப் செய்துகொண்டதாக தனது இணைய தள பக்கத்தில் அறிவித்துவிட்டு மேற்கொண்டு எதுவும் கருத்துதெரிவிக் காமல் மவுனம் ஆனார்.
ஒரு வருடமாக நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்த ஸ்ருதி தற்போது படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு வருகிறார் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் லாபம் படத்தில் நடிக்கிறார் ஸ்ருதிஹாசன்.
காதல் பிரேக்அப் குறித்து அதிகம் பேசாமலிருந்த ஸ்ருதிஹாசன் தற்போது வெளிப்படையாக பேசியிருக்கிறார். அவர் கூறும்போது, “நான் ஒரு எமோஷனலான ஆள் . அதனால் என்னுடன் இருப்பவர் என் மீது எளிதில் ஆதிக்கம் செலுத்திவிடுகிறார்கள்.
அதுவும் ஒரு நல்ல அனுபவம் தான். நல்லவர்கள் நன்றாக தான் நடந்துகொள்கின்றனர், சில சமயங்களில் தவறும் பண்ணுகிறார்கள் . இதற்கு நான் வருத்தப்படவில்லை. ஒரு சிறந்த காதலை தேடிக்கொண்டி ருக்கிறேன். அது வரும்போது அதனை எல்லோருக்கும் அறிவிப்பேன்' என்றார் ஸ்ருதிஹாசன்.