வாய் திறந்து பேசாதீங்க விஜய் .. வீடியோவில் சர்ச்சை இயக்குனர் பேச்சு..

by Chandru, Oct 12, 2019, 18:06 PM IST

'மிருகம்', 'உயிர்', 'சிந்து சமவெளி' உள்ளிட்ட சர்ச்சைப் படங்களை இயக்கியவர் இயக்குநர் சாமி. இறுதியாக 2015-ம் ஆண்டு 'கங்காரு' என்ற படத்தை இயக்கினார். . திடீரென்று அவர் விஜய்யை விமர்சித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

விஜய் சார் எப்படி இருக்கீங்க. என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா என்று தெரியாது. ஏனென்றால் 4 முறை மட்டுமே சந்தித்துள்ளோம். 3 முறை உங்கள் வீட்டில். உங்கள் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் சாருடைய 'தோஸ்த்' படத்துக்கு நான் வசனம் எழுதினேன். அந்தச் சமயத்தில் ஸ்டேட் பாங்க் காலனி வீட்டில் உங்களை 3 முறைச் சந்தித்துள்ளேன். அதற்குப் பிறகு ஒரே ஒருமுறை 2 மணி நேரம ஒரு கதையைச் சொல்லியிருக்கிறேன்.

இதெல்லாம் 2000-ம் ஆண்டு நடந்தது. சினிமாவில் என்ன வேண்டுமானாலும் நடக்கும் பிரச்னை இல்லை.

ரஜினி சார் மாதிரி நடித்துவிட்டு மட்டும் போங்கள். வாயைத் திறந்து பேசாதீங்க ப்ளீஸ். 'பிகில்' இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது, யாரை எங்கு வைக்கணுமோ அங்கு வைக்கணும் என பேசினீர்கள். அப்படியென்றால் கடவுள் உங்களை எங்கு வைத்துள்ளாரோ, அங்குதான் வைத்துள்ளார். நீங்கள் தேவையில்லாமல் வாயைத் திறந்து பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அதனால் மாட்டிக் கொள்கிறீர்கள்.

தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். சினிமாவில் அல்ல நிஜ வாழ்க்கையில் நீங்கள் எவ்வளவு பெரிய நடிகர் என்பது தெரியும். வசனம் எழுதினேன். அந்தச் சமயத்தில் ஸ்டேட் பாங்க் காலனி வீட்டில் உங்களை 3 முறைச் சந்தித்துள்ளேன்.கூறி உள்ளார்.


More Cinema News