சந்தானத்தின் 'தில்லுக்கு துட்டு 2', 'ஏ1' படங்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து ஆர்.கண்ணன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார் சந்தானம்.
கண்ணன் ஏற்கனவே பூமராங், ஜெயங்கொண்டான். இவன் தந்திரன் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர். தற்போது இயக்கும், சந்தானம் படத்தில் இரண்டு நடிகைகள் ஜோடியாக நடிக்கின்றனர். அதில் ஒருவர் ஏ1 படத்தின் நாயகி தாரா அலிஷா. மற்றொருவர் சுவாதி. தாரா டாக்டராகவும் , சுவாதி தொழிலதிபரராகவும் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 10 நாட்களுக்கு முன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் நவம்பர் இறுதிக்குள் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.