மம்முட்டி நடிக்கும் புதியபடம் மாமாங்கம் மலையாளம், தமிழ், தெலுங்கு உட்பட பல மொழி களில் வெளியாக இருக்கிறது. இப்படத்தை எம். பத்மகுமார் இயக்குகிறார். இவர் சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி ஹிட்டானஜோசஃப் பட இயக்குனர்.
பழஸிராஜா பாணியில் சரித்திர பின்னணியில் உருவாகும் இப்படத்தில் மம்முட்டியுடன் பிரபல பாலிவுட் நடிகை பிரட்சி தெஹலன் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்தது. தற்போது படத்தின் இறுதிகட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
வரும் நவம்பர் 21-ஆம் தேதி வெளியாகிறது. எல்லா மொழிகளிலும் மம்முட்டியே தனது கதாபாத்திரத்திற்கான டப்பிங் பேசுகிறார்.
இந்நிலையில் தமிழில் வெளியாக இருக்கும் மாமாங்கம் படத்திற்கான டப்பிங் வேலைகளும் வேகமாக நடந்துவருகிறது. மம்முட்டி தமிழில் டப்பிங் பேசுவதற்கு உதவி செய்ய இயக்குனர் ராம் கேரளாவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். இப்போது ராம் மேற்பார்வையில் மாமாங்கம் படத்திற்கான டப்பிங்கை பேசி வருகிறார் மம்முட்டி!
மம்மூட்டி நடித்த பேரன்பு படத்தை இயக்கியவர் ராம். அப்போது முதல் இருவரும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர்.