விஷால் படத்தில் நடிகைக்கு டப்பிங் பேசும் சாக்‌ஷி...

Sakshi Agarwal dubs for Vishals Action

by Chandru, Oct 16, 2019, 22:28 PM IST

ரஜினியுடன் காலா, அஜீத்துடன் விஸ்வாசம் படங்களில் நடித்தவர் சாக்‌ஷி அகர்வால்.

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமா னார். தற்போது ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் படம் ஆயிரம் ஜென்மங்கள் ஹீரோயினாக நடிக்கிறார். நடிகையாக மட்டும் வலம் வந்துக்கொண்டிருந்த சாக்‌ஷி அகர்வால் டப்பிங் கலைஞராகவும் மாறியிருக்கிறார்.

சுந்தர்.சி. இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம் ஆக்‌ஷன். இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடந்து முடிந்துள்ளது. தற்போது டப்பிங் பணிகள் நடக்கின்றன. இப்படத்தில் நடித்திருக்கும அகன்ஷா லட்சுமிக்கு சாக்‌ஷி டப்பிங் குரல் பேசியிருக்கிறார்.

இதுபற்றி சாக்‌ஷி தனது இன்ஸ்டாகிராமில் குறிப்பிடும்போது,' டப்பிங்கில எனது முதல் அனுபவம் என் வாழ்வில் புதிய வழிகள் திறக்கப்படுகின்றன மகிழ்ச்சியான தருணங்கள்' என குறிப்பிட்டுள்ளார்.

You'r reading விஷால் படத்தில் நடிகைக்கு டப்பிங் பேசும் சாக்‌ஷி... Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை