விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் படத்தில் ஆட்டமா தேரோட்டமா என்ற பாடலுக்கு நடனம் ஆடிய ரம்யாகிருஷ்ணன் பின்னாளில் தனக்கென திரையுலகில் இடம்பிடித்ததுடன் படையப்பா படத்தில் ரஜினிக்கு வில்லியாக நீலாம்பரி கதாபாத்திரம் ஏற்றார்.
கடந்த 2 ஆண்டுக்கு முன் வந்த பாகுபலி படத்தில் மகாராணி சிவகாமி வேடம் ஏற்று இதுவே என் கட்டளை இதுவே சாசனம் என்று அதிரடியாக வசனம் பேசி நடித்தார்.
ரம்யாகிருஷ்ணன் கணவர் கிருஷ்ண வம்சி. தெலுங்கில் பல்வேறு படங்களை இயக்கி உள்ளார். அவரது இயக்கத்தில் 1998ம் ஆண்டில் சந்திரலேகா, 2004ல் இயக்கிய ஸ்ரீ ஆஞ்சநேயம் படங்களில் நடித்திருந்தார் ரம்யா.
அதன்பிறகு 15 வருடங்கள் கழித்து தற்போது கிருஷ்ண வம்சி இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் ரம்யா. இப்படத்துக்கு வந்தே மாதரம் என பெயரிடப்பட்டிருக்கிறது. இதில் பிரகாஷ்ராஜ், அவிகா கோர் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர்.