ஜெயம் ரவி படத்தில் மீண்டும் இணையும் யோகி பி டி.இமான் இசையில் புதிய ராப் பாடல்

by Chandru, Oct 16, 2019, 22:39 PM IST

ஜெயம் ரவிக்கு இப்போது நேரம் நன்றாக இருக்கிறது. டிக் டிக் டிக், போகன், தனி ஒருவன், மிருதன் சமீபத்தில் வெளியான கோமாளி என எல்லா படங்களுமே ஹிட்டாக அமைந்தன.

அடுத்து பூமி, ஜனகனமன என 2 படங்களில் நடிக்கிறார். ரோமியோ ஜூலியட், போகன் படங்களை இயக்கிய லட்சுமன் பூமி படத்தை இயக்குகிறார். ஜனகன மன படத்தை அஹமத் இயக்குகிறார்.

ஜெயம் ரவியின் 25 படமாக உருவாகும் பூமி படத்துக்கு டி.இமான் இசை அமைக்கிறார். இதில் பிரபல ராப் பாடகர் யோகி பி ஒரு பாடல் பாடுவதாக இமான் தெரிவித்திருக்கிறார். இப்பாடலை மதன் கார்க்கி எழுதி உள்ளார். டிக் டிக் டிக் படத்தில் யோகி பாபு பாடிய பாடல் அப்படத்தின் ஹைலைட் பாடலாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.


Leave a reply