கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் கீர்த்தி... பெண்குயின் ஆகிறார்..

Karthik Subbaraj confirms film with Keerthy Suresh

by Chandru, Oct 17, 2019, 19:05 PM IST

விஜய் ஜோடியாக சர்கார் படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் அடுத்து ரஜினியுடன் தர்பார் படத்தில் நடிப்பார் என்று கிசுகிசு பரவியது. ஆனால் அது நிறைவேறவில்லை.

இதற்கிடையில் கீர்த்தி இந்திப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் கீர்த்தி. இந்நிலையில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிப்பில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் கீர்த்தி. முழுக்க திரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்தை புது இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் டைரக்டு செய்கிறார்.

கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளான இன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்திற்கு பெண்குயின் என பெயரிடப்பட்டுள்ளது.

கர்ப்பிணி பெண் வேடத்தில் கீர்த்தி நடிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய, அனில் கிரிஷ் எடிட் செய்கிறார். கொடைக்கானலில் படப்பிடிப்பை நடத்தி முடித்து அடுத்த ஆண்டு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Cinema News

அதிகம் படித்தவை