அடுத்த வருடம் எனக்கு தல தீபாவளி - பிரியா ஆனந்த் கொளுத்திபோட்ட பட்டாசு...

Is Priya Anand getting married next year?

by Chandru, Oct 26, 2019, 22:47 PM IST

எதிர்நீச்சல், இரும்புக்குதிரை, அரிமா நம்பி போன்ற படங்களில் நடித்திருக்கும் பிரியா ஆனந்த் தற்போது ஆதித்ய வர்மா படத்தில் துருவ் விக்ரமுடன் நடித்திருக்கிறார்.
பிரியா ஆனந்த் அளித்த பேட்டியில் கூறியதாவது:

என்னுடைய பெற்றோர்கள் அமெரிக்காவில் இருப்பதால் என்னுடைய பாட்டி கூடதான் எளிமையாக தீபாவளி கொண்டாடுவேன். நான் சினிமா துறைக்கு வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது. வணக்கம் சென்னை படம் தான் நான் நடித்ததில் ரொம்ப பிடித்தது.

எனக்கு கிடைத்த மிகப்பெரிய சந்தோஷம் ஸ்ரீதேவியுடன் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் நடித்ததுதான். தற்போது துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் ஆதித்ய வர்மாவில் ஹீரோயினாக நடித்திருக்கிறேன். ஆதித்ய வர்மா வித்தியாசமாக புதுமையான படமாக இருக்கும்.

நான் மிகவும் இளமையாக இருப்பதாக கூறுகிறார்கள். திரையில் பார்க்கும் போது பெரிய ஆளாக தெரிந்தாலும் நேரில் பார்ப்பவர்கள் அப்படி தெரியவில்லை என்று தான் சொல்லுவார்கள். எனது திருமணம்பற்றி நான் எந்த முடிவும் எடுக்கவில்லை.

இப்போதே என்னை பற்றிய காதல் கிசுகிசு வருகிறது. அப்படிப்பட்டவர்கள் நினைத்தால் அடுத்த வருடமே தல தீபாவளியாக கூட இருக்கலாம், யார் கண்டது' என்றார்.

You'r reading அடுத்த வருடம் எனக்கு தல தீபாவளி - பிரியா ஆனந்த் கொளுத்திபோட்ட பட்டாசு... Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அதிகம் படித்தவை