தளபதி விஜய் ரசிகர்களுக்கு நடிகை கஸ்தூரி கண்டனம்... இவர்கள்தான் வருங்கால தமிழகத்தின் விடிவெள்ளிகளா ?

Advertisement

தளபதி விஜய், இயக்குநர் அட்லீ கூட்டணியில் மூன்றாவதாக வெளியாகியிருக்கும் படம் பிகில். இப்படம் வெளிவருவதற்குள் கோர்ட் வழக்குகளை சந்தித்தது.

தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் படம் திரைக்கு வந்திருக்கிறது. படம் சூப்பராக தெறிக்கவிட்டிருக்கிறார்கள் அட்டகாசம் என்றும் ஒருசிலர் எதிர்மறை கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று 25ம் தேதி காலை கிருஷ்ணகிரியில் உள்ள திரையரங்கு ஒன்றில் பிகில் படம் வெளியிட தாமதமானதால் விஜய் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். திரையரங்கம் அருகே இருந்த கடைகளை அடித்து நொறுக்கினர். தீ வைப்பும் நடந்தது. இது இணைய தளத்திலும், டிவியிலும் வைரலாக பரவியது. அந்த வீடியோவை பார்த்த நடிகை கஸ்தூரி ரசிகர்களின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் டிவிட்டரில், 'பிகில் திரைப்படம் எத்தனை சாதனைகளை செய்தாலும், இந்த வன்முறை நிகழ்ச்சி தான் இந்த படத்தை பற்றி ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கும். நாம் பல காரணங்கள் சொல்லலாம், வேறு சிலரின் சதி என கூட கூறலாம், ஆனால் நம் மனதுக்கு உண்மை என்னவென்பது தெரியும். உண்மையான விஜய் ரசிகர்கள் தங்கள் ஹீரோவிற்கு இது போன்ற சூழலை உருவாக்கமாட்டார்கள்.

அவ்வளவு நபர்கள் பார்க்கிறார்கள், ரசிக்கிறார்கள், ஆர்பரிக்கிறார்கள். சிலர் வீடியோ எடுக்கிறார்கள். ஆனால் யாரும் சென்று தடுக்கவில்லை. பெண்கள், குழந்தைகள், வயதானவர் என ஒருவர் கூட இல்லை. அனைவரும் இளைஞர்கள் தான். விஜயின் ரசிகனோ எதிரியோ என்னவோ. எல்லோரும் இளைஞர்கள். ஒரு சினிமா காட்சிக்காக பொதுச்சொத்தை அழிக்கும் இவர்கள்தான் வருங்கால தமிழகத்தின் விடிவெள்ளிகளா ? அய்யோ.?' என கேட்டிருக்கிறார்.

ஒருபக்கம் பிகில் பட ரிலீஸின்போது பேனர் வைப்பதற்கு பதிலாக அந்த தொகையை செலவழித்த விஜய் ரசிகர்கள் மகளிர் பள்ளிக்கு கண்காணிப்பு கேமரா வாங்கித் தந்து பாராட்டை அள்ளினர். மற்றொருபுறம் ரசிகர்களின் இந்த வன்முறை செயல் கண்டனத்தை சம்பாதித்திருக்கிறது.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>