மணிரத்னம் வெளியிட்ட சைக்கோ பட டீஸர்... மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடிக்கிறார்..

by Chandru, Oct 28, 2019, 11:09 AM IST

நடிப்பிலிருந்து அரசியலுக்குள் அடியெடுத்து வைத்திருக்கும் உதயநிதி ஸ்டாலின் நடிப்பையும் விட்டுவிடாமல் தொடர்கிறார்.

கண்ணே கலைமானே படத்துக்கு பிறகு மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் படம் 'சைக்கோ'. இயக்குநர் ராம், அதிதி ராவ் ஹைத்ரி, நித்யா மேனன் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

இந்த படத்திற்காக இளையராஜா இசையில் சித் ஸ்ரீராம் பாடிய பாடல் ஒலிப்பதிவு சமீபத்தில் நடைபெற்றது. இந்த படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.

திரைப்பட இயக்குனர் மணிரத்னம் சைகோ படத்தின் டீஸரை வெளியிட்டார். இப்படத்தை டபுள் மீனிங் புரொடக்சன் நிறுவனம் தயாரிக்கிறது.


More Cinema News