நேரம், உறு மீன், பேட்ட உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் பாபி சிம்ஹா கடந்த 2015ம் ஆண்டு உறுமீன் படத்தில் நடித்தபோது அதில் ஹீரோயினாக நடித்த ரேஷ்மி மேனனை காதலித்து மணந்தார். இவர்களுக்கு முத்ரா என்ற பெண் குழந்தை உள்ளது.
நடிப்பிலிருந்து ஒதுங்கி குடும்ப பொறுப்பை சுமந்துகொண்ட ரேஷ்மி மேனன் தற்போது இரண்டாவது குழந்தைக்கு தாய் ஆகிறார்.
கர்ப்பமாக இருக்கும் ரேஷ்மிக்கு அவரது குடும்பத்தார் பாரம்பரிய முறைப்படி வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினர். அதற்கான புகைப்படங்களை ரேஷ்மி மேனன் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.