அனுஷ்காவின் அழகில் மயங்கிய பிரபாஸ்.. காதல் குறித்து மனம் திறந்த நடிகர்...

பாகுபலி ஜோடி பிரபாஸ், அனுஷ்காவுக்கு இடையே காதல் என்று கடந்த சில வருடங்களாகவே திரையுலகில் மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியிலும். இணைய தளங்களிலும் பேசப்பட்டு வருகிறது. ஆனால் தங்களுக்குள் நட்பு இருக்கிறது காதல் இல்லை என்று அரைத்த மாவையே இருவரும் (பிரபாஸ், அனுஷ்கா) அரைத்துக்கொண்டிருக்கின்றனர். இவ்வளவு தீவிரமாக காதல் வதந்தி பரவிய நிலையிலும் அவர்கள் ஜோடி போட்டு சுற்றுவது அவ்வப்போது நடக்கிறது.

சமீபத்தில் லண்டன் சென்றவர்கள் அங்குள்ள சரித்திர புகழ் பெற்ற இடங்களுக்கு சென்று ஜோடியாகவும் உடன்வந்த ராஜமவுலி, ராணா உள்ளிட்டவர்களுடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்நிலையில் அனுஷ்காவின் அழகை வர்ணித்து பிரபாஸ் அளித்துள்ள பேட்டி இருவரின் காதல் தீ கிசுகிசுவில் எண்ணெய் ஊற்றியதுபோல் அமைந்துள்ளது.

"நானும் அனுஷ்காவும் சில படங்களில் இணைந்து நடித்துள்ளோம். எங்களுக்குள் 11 ஆண்டு நட்பு உள்ளது. மற்றவர்கள் நினைப்பது போல், நிஜமாகவே எங்களுக்குள் ஏதாவது ஒரு உறவு இருந்தால் அதனை ஏன் நாங்கள் மறைக்க வேண்டும். அப்படி ஒரு கட்டாயமே இல்லையே. இருவரில் யாராவது ஒருவருக்கு திருமணம் ஆகும் வரை இந்த வதந்தி நீடித்துக்கொண்டுதான் இருக்கும்' என்ற பிரபாஸ் மேலும் தொடர்ந்தார்.

'அனுஷ்கா மிகவும் அழகானவர். அதனால் தான் பாகுபலியில் தேவசேனை கதாபாத்திரத்தில் அவர் நடித்தார். அவரையும் என்னையும் திரையில் இருக்கும் ஒரு ஜோடியாகத் தான் மக்கள் பார்க்கிறார்கள் எங்களைப்பற்றிய வதந்தியை எப்படி நிறுத்துவது என்று தெரியவில்லை. நிச்சயம் ஒருநாள் நான் திருமணம் செய்து கொள்வேன். எனக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இருக்கிறது.

சமீபத்தில் திருமணம் பற்றிய எண்ணம் எனக்கு வந்தது. ஆனால் அப்போது படவேலைகளில் பிசியாக இருந்த தால் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் சீக்கிரமே திருமணம் செய்து கொள்வேன் என நம்புகிறேன் என்றார் பிரபாஸ்.

அனுஷ்காவின் அழகை புகழ்ந்து பிரபாஸ் அளித்துள்ள பேட்டி. மேலும் தான் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த சஹோ படத்தை பார்க்க அனுஷ்காவுக்கு சிறப்பு காட்சியை பிரபாஸ் திரையிட்டார். இதெல்லாம் சேர்ந்து அவர்களைப்பற்றிய காதல் கிசுகிசுவை தீவிரப்படுத்தி உள்ளது.

Advertisement
More Cinema News
nivetha-gets-angry-with-the-questions-about-virginity
கன்னித்தன்மை கேள்வி? கோபத்தில் பொங்கிய நிவேதா தாமஸ்.. யாருகிட்ட என்ன கேள்வி கேட்கறதுன்னு விவஸ்தை இல்லையா...
sivakarthikeyan-movie-hero
மால்டோ கிட்டபுலேஅப்படின்னா என்ன?..  சிவகார்த்திகேயனிடம் கலாய்ப்பு...
iffi-2019
ரகுல், ராஷ்மிகா, நித்யா, விஜய்தேரகொண்டா கோவாவில் கூட்டணி... புதுடிரெண்ட் செட் செய்வது எப்படி...
after-seven-years-priyamani-acting-in-tamil-film
7 வருடமாக காணாமல்போன பிரியாமணி... மறுபடியும் வருகிறார்.. இருமொழி படத்தில் நடிக்கிறார்...
sshivada-getting-ready-for-shoot-post-delivery
நடிக்க ரெடியாகும் நெடுஞ்சாலை ஷிவதா.. குழந்தைபெற்றதும் உடற்பயிற்சியில் தீவிரம்...
mani-ratnams-ponniyin-selvan
மணிரத்னம் இயக்கத்தில் மகனுடன் நடிக்கிறார் ஜெயம் ரவி... 2 முறையாக இணையும் தந்தை- மகன்...
actor-bobby-simha-in-kamal-haasans-indian-2
இந்தியன் 2வில் கமலுடன் இணையும் பாபி சிம்ஹா... போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்...
96-actress-joins-thlapathi-64
தளபதி 64-ல் இணைந்த 96 பட நடிகை.. யார் தெரியுமா?...
actor-prithviraj-luxury-car
சொகுசு கார் வாங்கி சர்ச்சையில் சிக்கிய பிரித்விராஜ்...கூடுதலாக ரூ. 9 லட்சம் அபராதம் கட்டினார்..
asuran-telugu-remake
அசுரன் தெலுங்கு ரீமேக்கில் மஞ்சுவாரியர் கதாபாத்திரத்தில் ஸ்ரேயா... தனுஷ் வேடத்தில் வெங்கடேஷ்...
Tag Clouds